NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / காபி தெரியும், அதென்ன White coffee? ட்ரெண்ட் ஆகும் இந்த புதிய காபி பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் 
    காபி தெரியும், அதென்ன White coffee? ட்ரெண்ட் ஆகும் இந்த புதிய காபி பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் 
    1/2
    வாழ்க்கை 1 நிமிட வாசிப்பு

    காபி தெரியும், அதென்ன White coffee? ட்ரெண்ட் ஆகும் இந்த புதிய காபி பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 19, 2023
    10:12 am
    காபி தெரியும், அதென்ன White coffee? ட்ரெண்ட் ஆகும் இந்த புதிய காபி பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் 
    குறைந்த வெப்பத்தில் வெறுக்கப்படும் வெள்ளை காபி கொட்டைகள்

    உலகம் எங்கும் காபி பிரியர்கள் ஏராளம் உண்டு. அவர்களை கவரும் வகையில் பல வகையான காபி தயாரிப்புகள் பயன்பாட்டில் உள்ளது. எஸ்பிரெஸ்ஸோ, Latte, பிளாக் காபி, Cappucino போன்ற காபி வகையறாக்கள் வரிசையில் புதிதாக இணைந்திருப்பது இந்த White coffee. முதலில், வெள்ளை காபிக்கும், வெள்ளை நிறத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை! மாறாக, இது காபி கொட்டைகளை வறுக்கும் முறை பற்றியது. சாதாரணமாக காபி டிகாஷன்களுக்கு பயன்படுத்தப்படும் காபி கொட்டைகள், அதிக வெப்பநிலையில் வெறுக்கப்படும். மாறாக, வைட் காபிக்கு பயன்படுத்தப்படும் கொட்டைகள், 325 டிகிரி பாரன்ஹீட்க்கும் குறைந்த வெப்பநிலையில், லேசாக வறுக்கப்படுகின்றன. அப்படி வெறுக்கப்படும் காபி கொட்டைகள், மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், ஸ்பெஷல் கிரைண்டர்களைப் பயன்படுத்தி அரைக்கப்படுகிறது.

    2/2

    இது புதிய வகை காபி இல்லை, பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் உள்ளது

    இந்த காபி வகை அரபு நாடுகளில் தோன்றியதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த வகை காபி, ஏமன் மற்றும் மலேசியாவில் பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. மலேசியர்கள், பல நூற்றாண்டுகளாக தங்கள் தினசரியில் ஒரு பகுதியாக இதை குடித்து வருகின்றனர். காலப்போக்கில், ஜோர்டான், லெபனான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இதை பின்பற்ற துவங்கியதாக தெரிகிறது. வெள்ளை காபி கொட்டைகள், நிறைந்த அமிலத்தன்மை மற்றும் மிகக் குறைந்த கசப்பைக் கொண்டுள்ளது. ஏனெனில், பீன்ஸ் மிகவும் லேசாக வறுக்கப்படுவதால், அவற்றின் இயற்கையான சர்க்கரைகள் கெடாமல், கரிம அமிலங்களும் பாதுகாக்கப்படுகிறது. அதனால், குடலுக்கும் நல்லது. நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்ற செரிமான சுகாதார பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உணவு குறிப்புகள்
    உலகம்

    உணவு குறிப்புகள்

    இந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா? இந்தியா
    ரவா இட்லி உருவான உலகப்போர் கதை தெரியுமா? வைரல் செய்தி
    காரத்தில் இத்தனை வகைகளா?வைரலாகும் அமெரிக்க உணவகத்தின் மெனு கார்டு  வைரல் செய்தி
    மூலிகை கரும்புச்சாறு கேள்விப்பட்டதுண்டா? திண்டுக்கல்லில் பிரபலமான இந்த ஜூஸ் பற்றி சில தகவல்கள் ஆரோக்கியம்

    உலகம்

    பிரிட்டன் அரசின் புதிய சட்டம்.. எதிர்க்கும் வாட்ஸ்அப்.. என்ன நடக்கிறது?  பிரிட்டன்
    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா?  அமெரிக்கா
    இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை இந்தியா
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான் பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023