தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அவர்களின் மிகப்பெரிய பண்டிகையாக இந்தியா மற்றும் உலகத்தின் பல பகுதிகளிலும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒரு நாள் பண்டிகையாகவும், வட மாநிலங்களில் நான்கு நாள் பண்டிகை ஆகவும் தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்காட்டில் ஐப்பசி மாத அமாவாசை தீபாவளியாக கடைபிடிக்கப்படுகிறது. தீபாவளியின் நான்கு நாட்களும் மக்கள் நம்பிக்கை, அன்பு, அமைதி மற்றும் புத்துணர்ச்சியூட்டப்பட்ட மனதுடன், நாடு முழுவதும் அவரவர்களின் தனித்துவமான பாரம்பரியத்துடன் கொண்டாடுவார்கள்.
தீபாவளியின் வரலாறு- 1
தீபாவளியின் வரலாறு பழங்கால இந்தியாவுடன் நெடுந்தொடர்பை கொண்டுள்ளது. தீபாவளி அறுவடை பண்டிகையாக முதலில் கொண்டாடப்பட்டு இருக்கலாம் என பலர் கருதுகிறார்கள். ஆனால் மேலும் பலர், தீபாவளி கொண்டாடப்படுவதற்கு வேறு காரணங்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். செல்வத்தின் கடவுளான லட்சுமிக்கும், பகவான் விஷ்ணுவுக்கும் நடைபெற்ற திருமணத்தை கொண்டாடுவது தீபாவளி என சிலர் கூறுகிறார்கள். அதே சமயம் சிலர், லட்சுமியின் பிறந்தநாள் தான் தீபாவளி என வாதிடுகிறார்கள். வங்கத்தில் தீபாவளி அன்று காளி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். யானை முக கடவுளான விநாயகரையும் தீபாவளி அன்று பல குடும்பங்களில் வணங்குகிறார்கள். சில சமண சமய குடும்பங்களில், கடவுள் மகாவீரர் நித்திய பேரின்பத்தை அடைந்ததை தீபாவளியாக அனுசரிக்கிறார்கள்.
தீபாவளியின் வரலாறு- 2
பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டாலும் பெரும்பான்மையான இந்துக்கள், 14 வருட வனவாசத்திற்கு பின், ராமர் தனது மனைவி சீதையுடன் அயோதிக்கு திரும்பிய நாளை தீபாவளியாக கருதுகிறார்கள். எனவே, தீபாவளியன்று எண்ணெய் விளக்குகளை ஏற்றும் பாரம்பரியத்தை கடைபிடிக்கிறார்கள். இது தீமையிடமிருந்து நன்மை வெற்றி பெற்றதை உணர்த்துகிறது. மேலும் தீபாவளி, இந்து மதம் தவிர, புத்த, சமன மற்றும் சீக்கிய மதத்தினராலும் பல்வேறு பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படுகிறது.
தீபாவளியின் முக்கியத்துவம்
தீபாவளிக்கு ஏற்றப்படும் விளக்குகள், தீமை மற்றும் இருளை அகற்றி, மக்கள் மத்தியில் அன்பு, நன்மை மற்றும் தூய்மை நிறைந்த அற்புதமான சூழ்நிலையை உருவாக்குகின்றது. தீபாவளி என்பது விளக்குகள், கொண்டாட்டம், பரிசுகளால் ஆனது மட்டுமல்ல; தீபாவளி என்பது ஒருவரது வாழ்க்கையில், கடந்த கால செயல்களை நினைவு கூர்ந்து, வரவிருக்கும் ஆண்டிற்கான சரியான மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு நாளாகும். தீபாவளி பண்டிகை பிறருக்கு வழங்கவும், பிறரை மன்னிப்பதற்கான பண்டிகையாகும். இப்பண்டிகை, மக்கள் பகைமையை மறந்து, பகைவரை மன்னித்து, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கான நேரம் ஆகும்.
ஒவ்வொரு இந்தியரையும் இணைக்கும் தீபாவளி
உலகில் உள்ள அனைத்து மதம், இனம், ஜாதி மக்களை ஒன்றிணைக்கும் கொண்டாட்டம் தீபாவளி. எளிமையான புன்னகையும், இணக்கமான இதயமும் கடினமான இதயங்களைக் கூட உருக வைக்கிறது. மக்கள் மகிழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவரையொருவர் அரவணைத்துக்கொள்ளும் நாள் இது. செழிப்பின் கொண்டாட்டமான தீபாவளி, இந்த ஆண்டு முழுவதும் நமது பணியையும், நல்லெண்ணத்தையும் தொடர வலிமையை தருகிறது. இதனால் மக்கள், ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். மிக முக்கியமாக, தீபாவளி நம் உள்ளத்தை ஒளிரச் செய்கிறது. தீபாவளியின் விளக்குகள், பட்டாசுகள் நமது நிறைவேறாத ஆசைகள், இருண்ட எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, ஆழமான, சுய பிரதிபலிப்பை உணர நேரத்தையும் நமக்கு வழங்குகிறது.
தீபாவளி கொண்டாடப்படும் திதி
அமாவாசை திதி ஆரம்பம் - நவம்பர் 12, 2023 - 02:44 PM அமாவாசை திதி முடியும் - நவம்பர் 13, 2023 - 02:56 PM பிரதோஷ காலம் - நவம்பர் 12, 2023 - 05:08 PM முதல் 07:41 PM வரை விருஷப காலம் - நவம்பர் 12, 2023 - 05:19 PM முதல் 07:19 PM வரை லக்ஷ்மி பூஜன் முகூர்த்தம் - நவம்பர் 12, 2023 - 05:19 PM முதல் 07: 19 PM