
எடை இழப்பு பயணத்தில், தவிர்க்க வேண்டிய தவறுகள்
செய்தி முன்னோட்டம்
எடைக் குறைப்புப் பயணத்தைத் தொடங்குவது என்பது பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது போல சூழப்பமில்லை.
பெரும்பால நேரங்களில் உங்கள் பயணத்தை தடுக்க பல தவறுகள் நடக்கும்.
இந்த வருட நியூ இயர் ரெசொலூஷன் எடுக்கும் போது, இந்தப் தவறுகளை புரிந்துகொள்வதும், அவற்றை தவிர்க்கும் முறையையும் மேற்கொள்வோம்.
சரி, அது என்ன பொதுவான தவறுகள் என்று விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
card 2
மிகக் குறைந்த கலோரிகளை உண்பது
எடை இழப்பிற்கு, மிகக் குறைந்த கலோரி உணவுகள் தான் சரி என உங்களுக்கு தோன்றலாம், ஆனால் குறைவான கலோரிகளை உட்கொள்வதால், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் மந்தமான வளர்சிதை மாற்றம் ஏற்படும்.
தீவிர கலோரி கட்டுப்பாடுகளை விட, சரியான ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.
போதுமான புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு நல்ல ஆரோகியமான உணவு, நிலையான எடை இழப்புக்கான அடித்தளமாக அமையும்.
card 2
தவறான உணவு சேர்க்கைகள்
திறம்பட எடை குறைப்பதில், உங்கள் அன்றாட உணவின் கலவை முக்கிய பங்கு வகிக்கிறது.
சரியான சமநிலையை அடைவது அவசியம்; காய்கறிகளுக்கு 50%, புரதத்திற்கு 25%, கார்போஹைட்ரேட்டுகளுக்கு 25% மற்றும் புரோபயாடிக்குகளுக்கு ஒரு சிறிய பகுதியை ஒதுக்க வேண்டும்.
எந்தவொரு உணவு காம்பினேஷனையும் முழுமையாக தவிர்ப்பது, உங்கள் உடலில், கார்போஹைட்ரேட்டுகளின் அதிகரிப்பு, இன்சுலின் அளவை அதிகரிப்பது மற்றும் கொழுப்புச் சேமிப்பை ஊக்குவிக்கும்.
எனவே இந்த பரிந்துரைக்கப்பட்ட விகிதங்களைப் பின்பற்றுவதநால், உகந்த முடிவுகளை உறுதி பெற முடியும்.
card 3
எட்டமுடியாத இலக்குகளை அமைத்தல்
உங்கள் லட்சியமான எடை இழப்பு இலக்குகளை நிர்ணயிப்பது பாராட்டுக்குரியது என்றாலும், அவற்றை யதார்த்தமான செயல்கள் மூலம் பெறுவதே நீடித்த வெற்றியாகும்.
உடல் எடை குறைப்பதற்கு நீங்கள் எட்டமுடியாத இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நோக்கி செயல்பட்டால், ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விடுவீர்கள்.
பின்னர் ஏமாற்றமே மிஞ்சும். நிலையான முன்னேற்றம், எப்போதும் உடனடியாக வெளிப்படாமல் இருக்கலாம்.
ஆனால், உடல் அமைப்பில் நேர்மறையான மாற்றங்கள், அதிகரித்த ஆற்றல் அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவை நிச்சயம் நடைபெறும்.
card 4
உங்கள் உடற்பயிற்சி முறைகளை மாற்றாமல் இருப்பது
மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது ஒரு வித பரிச்சயத்தை வளர்க்கிறது.
அதனால் இது முன்னேற்றத்தில் தடைக்கல்லாக மாறும். இதைத் தவிர்க்க, வெவ்வேறு தசைக் குழுக்களை இலக்காகக் கொண்ட உடற்பயிற்சிகளையும், அதன் தீவிரத்தை மாற்றியமைப்பதன் மூலமும் உங்கள் உடற்பயிற்சியை சரி செய்யுங்கள்.
இந்த அணுகுமுறை உங்கள் உடலுக்கு ஒரு விதமான சவாலை அளிக்கும்.
அதனால், கலோரி எரிப்பும் அதிகரிக்கிறது மற்றும் முழுமையான உடற்தகுதி வளர்கிறது.
தினமும் படிக்கட்டுகளில் ஏறினாலும் என்னால் ஏன் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்ற உங்கள் கேள்விக்கு இது பதிலளிக்கும்.
card 5
போதுமான தூக்கம் இல்லை
எடை இழப்பு பயணத்தில், மிகவும் முக்கியமான அங்கம், போதுமான தூக்கம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில், அதன் முக்கியத்துவத்தை தாண்டி, தூக்கமின்மை மந்தமான அமைப்புக்கு வழிவகுக்கும்.
அதோடு, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.
ஏழு முதல் எட்டு மணிநேர நிதானமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது உங்கள் எடை இழப்பு இலக்குகளை ஆதரிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
card 6
அதிக மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வது
தினசரி மனஅழுத்தங்களை அனுபவிப்பது பொதுவானது என்றாலும், நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு ஒரு தடையாக செயல்படும்.
கார்டிசோல் அளவு அதிகரிப்பு, மன அழுத்த ஹார்மோன், பல்வேறு உடலியல் பதில்களைத் தூண்டலாம், இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் எடை இழப்பு பயணத்தின் போது, ஆரோக்கியமான மனநிலையை பராமரிக்க மன அழுத்த மேலாண்மை அவசியம்.
தியானம், மூச்சு பயிற்சி போன்றவற்றை அவ்வப்போது கடைபிடிப்பது அவசியம்