LOADING...
என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள்
என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள்

என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2023
07:28 am

செய்தி முன்னோட்டம்

ஆயுர்வேதத்தின் பண்டைய மருத்துவ முறையானது, பல இயற்கை மூலிகைகள் மற்றும் பல கலவையான பொருட்களை உள்ளடக்கியது. அவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இவற்றில் சில, உங்களை என்றென்றும் இளமையாக தோற்றமளிக்க வைக்கும் வரப்ரசாதங்களாகும். அவற்றை தினசரி எடுத்துக்கொள்வதால்,வயதான அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுகின்றன. எங்களை நம்பவில்லையா? வலிமையான வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இந்த ஆயுர்வேத பொருட்கள் அறிவியலால் நிரூபிக்கபட்டவை. மேற்கொண்டு படியுங்கள், பயன்பெறுங்கள்!

card 2

கோது கோலா

கோது கோலா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இது ட்ரைடர்பீன்ஸ், ஆசியாட்டிகோசைடு மற்றும் மேட்காசிக் அமிலம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. அவை உங்கள் சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த சக்தி வாய்ந்த முகவர்கள் உங்கள் வடுக்கள், முகப்பரு, சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். அவை உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் வைத்திருக்கும். அதனால் உங்களை சருமம் இளமையாக தோற்றமளிக்க துவங்கும்.

card 3

நெல்லிக்காய்

நெல்லிக்காய் மற்றொரு அருமையான ஆயுர்வேத மூலப்பொருள் ஆகும். இது அதன் வயது எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்படுகிறது. இதன் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. இதனால் வயதான தோற்றத்தை தடுக்கிறது. வேறு என்ன? இது சரும வறட்சி, சுருக்கங்கள், நிறமிகள் மற்றும் முகப்பருவை நீக்கி, இளமையுடன் தோற்றமளிக்க உதவுகிறது. நீங்கள் பச்சை நெல்லிக்காயை உட்கொள்ளலாம் அல்லது நெல்லிக்காய் பேஸ்ட்டை தயார் செய்து உங்கள் தோலில் மேற்பூச்சாக தடவலாம்.

Advertisement

card 4

அஸ்வகந்தா

அஸ்வகந்தா, பாரம்பரியமாக அடாப்டோஜனாகப் பயன்படுத்தப்பட்டாலும், சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பிலிருந்து பாதுகாத்து, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் தோல் தளர்ச்சியைக் குறைத்து, இறுதியில் உங்கள் இளமைத் தோற்றத்தை மேம்படுத்துவதன் மூலம், வயதானதைத் தாமதப்படுத்துவதாக அறியப்படுகிறது. பல 'வயது எதிர்ப்பு' ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளபடி, அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ், எண்ணெய்கள் மற்றும் சீரம்களை உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது சருமத்தின் தரம், அமைப்பு மற்றும் உறுதியை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர் .

Advertisement

card 5

மஞ்சள்

மஞ்சளில் அதிகப்படியான வயது எதிர்ப்பு முகவர்கள் நிரம்பியுள்ளது. இது சுருக்கங்கள் மற்றும் வயதானதற்கான பிற அறிகுறிகளைக் குறைக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், முகப்பரு, காயங்கள், தழும்புகள் மற்றும் காயங்களிலிருந்து உங்கள் சருமத்தை குணப்படுத்துகிறது. மேலும் உங்கள் சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கிறது. இந்த நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் தினமும் மஞ்சள் பால் அருந்தலாம் அல்லது உங்கள் தினசரி ஃபேஸ் பேக்கில் பயன்படுத்தலாம்

Advertisement