Page Loader
சென்னையில் மெரினா உணவு திருவிழா; நாளை முதல் தொடக்கம்
மெரினா உணவு திருவிழா நாளை துவங்குகிறது

சென்னையில் மெரினா உணவு திருவிழா; நாளை முதல் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 19, 2024
02:24 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து நடத்தும் உணவுத்திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நாளை துவங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த உணவுத்திருவிழாவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இது குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியானது. பல நூறு வகை சைவ, அசைவ உணவுகள் இந்த திருவிழாவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகள் அனைத்தும் FSSAI சான்றிதழ் பெற்ற தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரங்கள்

நேரம், கட்டணம் மற்றும் இதர விவரங்கள்

இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பான பலகாரங்களும், கார உணவுகளும் விற்கப்படும். இந்த உணவுத்திருவிழாவுக்கான உணவுகள் சுய உதவிக் குழுக்களின் மூலம் தயாரிக்கப்படும். 20.12.2024 முதல் 24.12.2024 வரை மெரினா கடற்கரையில் நடைபெறும். தமிழ்நாட்டின் பண்டைய உணவுகள் மட்டுமின்றி, ரெடி டு ஈட் வகை உணவுகளான வறுத்த முந்திரி, நாட்டுச் சர்க்கரை எள்ளுருண்டை, பாசிப்பருப்பு உருண்டை உள்ளிட்டவைகளும் விற்கப்படும். இந்த உணவுத்திருவிழாவிற்கு அனுமதி இலவசம். நாளை துவக்கநாள் மட்டும் மாலை 04.00 மணி முதல் 08.30 மணி வரை நடைபெறும். மற்ற நாட்களில், அதாவது 21.12.2024 முதல் 24.12.2024 வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை உணவுத்திருவிழா நடைபெறும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post