NEET-UG வினாத்தாள் கசிவின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
செய்தி முன்னோட்டம்
பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கடந்த மாதம் தேர்வுக்கு முன்னதாக நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பதாரர்கள் உட்பட 13 பேரை கடந்த மாதம் கைது செய்தது.
நீட் வினாத்தாள் கசிவு பற்றிய ரகசிய தகவலைப் பெற்ற பின்னர் இந்த கைது நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பேப்பர் கசிவு மற்றும் கடைசி நிமிடத்தில் கருணை மதிப்பெண்களை நடைமுறைப்படுத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியபோது அதுவரை வெளியுலகிற்கு தெரிய வராத இந்த வழக்கு, பெரிதாக வெடித்தது.
கைது செய்யப்பட்ட 13 பேரில், நான்கு பேர் "முக்கிய அமைப்பாளர்கள்" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
வாக்குமூலங்கள்
NEET-UG வினாத்தாள் கசிவு வழக்கில் வெளியான விவரங்கள்
கைதானவர்களில் முக்கியமானவர்கள், அனுராக் யாதவ்- ஒரு நீட் தேர்வு மாணவர்; சிக்கந்தர் யாதவேந்து- டானாபூர் நகராட்சி இளநிலை பொறியாளர்; மற்றும் இரண்டு கூட்டாளிகள், நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த்.
நான்கு பேரும் ஊழலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
விசாரணையின் போது, அனுராக், தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தேர்வு கேள்விகளைப் பெற்று மனப்பாடம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவரது மாமாவான சிக்கந்தர், தேர்வு "எல்லாம் சரிகட்டபட்டுவிட்டது" என்று அவருக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கசிந்த வினாத்தாள் உண்மையான தேர்வு வினாத்தாளுடன் பொருந்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
விசாரணை
விசாரணை, கைது என பரபரக்கும் களம்
அனுராக்கைப் போலவே, நிதிஷ் மற்றும் அமித் ஆகியோரும் தங்கள் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக வினாத்தாளைப் பெற்றதாகவும், அதை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டதாகவும் கூறினர்.
வினாத்தாள்கள் மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அமித் போலீசாரிடம் தெரிவித்தார்.
"எந்தப் போட்டித் தேர்வின் பேப்பரையும் கசியவிடலாம் என்று சிக்கந்தரிடம் சொன்னேன்... நீட் தேர்வுக்குத் தயாராகும் 4-5 பேர் தன்னிடம் இருப்பதாகச் சொன்னான்.. அதற்கு ₹30-32 லட்சம் செலவாகும் என்று சொன்னேன். சிக்கந்தர் ஒப்புக்கொண்டார்" என்று அமித் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை சிக்கந்தரும் உறுதிப்படுத்தினார்.
பாட்னாவில் உள்ள விருந்தினர் மாளிகையில் தனது மருமகன் அனுராக் மற்றும் அனுராக்கின் தாயார் தங்குவதற்கு ஏற்பாடு செய்ததை விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார். அங்கு அவர்கள் வினாத்தாளினை பெற்றதாகக் கூறப்படுகிறது.
அரசியல் தொடர்புகள்
அரசியல் தொடர்புகள் வெளிப்பட்டது
வியாழன் அன்று, பீகாரின் துணை முதல்வர் விஜய் சர்மா, தனக்கு முன் இருந்த தேஜஸ்வி யாதவ், சர்ச்சையில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டினார்.
தேஜஸ்வியின் தனிப்பட்ட செயலாளரான பிரீதம் குமாருடன் சிக்கந்தர் நெருங்கிய தொடர்புடையவர் என்று சின்ஹா கூறினார்.
இருப்பினும், இந்த வழக்கில் ப்ரீதம் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரத்தையும் EOW கண்டுபிடிக்கவில்லை.
சர்ச்சைகளை தொடர்ந்து, பாட்னாவில் NEET-UG 2024 நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவதை பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு EOW-க்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், புதிய தேர்வு நடத்தப்படும் என்றும், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.