
15 நிமிடங்கள் நீடித்த இபிஎஸ்-அமித் ஷா சந்திப்பில் என்ன நடந்தது? வெளியான தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) செவ்வாய்க்கிழமை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 15 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்திற்கு முன்பே, சந்திப்புக்கான காரணம் குறித்து ஊகங்கள் பரவின. கூட்டணியை மீண்டும் நிறுவுவதற்கான குறிப்பிட்ட நிபந்தனைகளை இபிஎஸ் முன்வைத்ததாகவும், 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணியை அதிமுக வழிநடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்திப்பின் போது, அதிமுகவின் மூத்த தலைவர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பங்கை குறைக்கவும் கோரிக்கை
நேற்றைய சந்திப்பில், EPS, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் பங்கைக் குறைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும்வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கூடுதலாக, கூட்டணி சூழலில் டிடிவி தினகரன், விகே சசிகலா அல்லது ஓ. பன்னீர்செல்வம் போன்ற பிரமுகர்களைப் பற்றி தனக்கு கவலை இல்லை என்று இபிஎஸ் குறிப்பிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அண்ணாமலைக்கும், அதிமுகவிற்கு வார்த்தை மோதல் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக முடிவெடுத்தது.
தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் திமுகவை தோற்கடிக்க "ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன்" ஒத்துழைக்க திறந்த மனதுடன் இருப்பதாக இபிஎஸ் முன்பு கூறியதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.