Page Loader
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்
எம்எல்ஏ புகழேந்தி, உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2024
11:03 am

செய்தி முன்னோட்டம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி, உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். திமுகவின் மூத்த தலைவர் பொன்முடியின் ஆதரவாளரான புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். இன்று காலை முதல் அவர் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டு, தற்போது அவர் உயிர் பிரிந்தது. புகழேந்தி, 1973ஆம் ஆண்டு முதல் திமுகவில் செயல்பட்டு வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உயிரிழந்ததைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் களமிறங்கினார் புகழேந்தி. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுச் தேர்தலில் அதே தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.

embed

விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி காலமானார்

#BREAKING | விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார்!#SunNews | #DMK | #Pugazhendhi | #Villupuram pic.twitter.com/oBQmqVsUhU— Sun News (@sunnewstamil) April 6, 2024