Page Loader
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பு
கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2025
06:40 pm

செய்தி முன்னோட்டம்

திருப்பூர்-திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணித்த போது, ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் ஓடும் ரயிலிலிருந்து தள்ளி படுகாயமடைய செய்த ஹேமராஜ், குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 7, வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அருகே ஓடும் ரயிலில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வழக்கு 5 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த, நான்கு மாத கர்ப்பிணி. அவர் திருப்பூரிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்த போது இந்த குற்றம் நடைபெற்றது.

விவரங்கள்

வழக்கின் விவரங்கள்

திருப்பூரில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலில் மகளிர் தனிப்பெட்டியில் யாரும் இல்லாததைக் கண்டு, அதே ரயிலில் பயணித்த ஹேமராஜ், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த கர்ப்பிணி பெண்ணின் கையை உடைத்து, ஹேமராஜ் ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த அந்த பெண்ணிற்கு, தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், ரத்தப்போக்கு மற்றும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன. ரயில்வே போலீசாரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்த திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம், தண்டனை விவரங்களை ஜூலை 14, 2025 வாசிப்பதாக தெரிவித்தது.