
'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
செய்தி முன்னோட்டம்
கேரளா-கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்னும் பகுதியில் மகாதேவர் கோயில் வளாகம் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த தடையினை நீக்க கோரி வைக்கம் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் கலந்துகொள்ள வேண்டும் என்று அப்போதைய கேரள தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் பெரியார் வைக்கம் சென்று அந்த போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
போராட்டம்
2023ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி முதல் ஓராண்டு காலம் கொண்டாட்டம்
பல நாட்கள் அங்கேயே தங்கி அங்கிருந்த மக்கள் மத்தியில் வைக்கம் போராட்டம் குறித்து தனது சமூக, சீர்திருத்த கருத்துக்களை எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
வைக்கம் போராட்டத்தினை வெற்றியடையவும் செய்தார் என்று வரலாறு கூறுகிறது.
இந்த வைக்கம் போராட்டம் நிறைவுற்று தற்போது நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதனையொட்டி 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி முதல் ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு பொதுமக்கள், மாணவ-மாணவியர்கள் மத்தியில் கொண்டாடப்படும் என்று மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.
அறிவிப்பு
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதன் நோக்கம்
இந்நிலையில், சமூகநீதியின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த இந்த வைக்கம் போராட்டம் தந்தை பெரியார் மக்களுக்காக முன்னின்று நடத்தி,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடி வரலாற்றில் பல புரட்சிகளை செய்து காட்டிய அவரது நினைவினை போற்றவும்,
பெரியாரின் சமூக கருத்துக்களை இத்தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
விழா
பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி
இதன்படி, வைக்கம் போராட்டம் நூற்றாண்டு குறித்த கட்டுரைகளை ஒருங்கிணைக்க பல்வேறு அறிஞர்களிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டு 'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' என்னும் சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மலர் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை 'தமிழரசு' சார்பில் தயாரித்து வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த 'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு மலரை இன்று(டிச.,28)தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக அரசு சார்பில் சிறப்பு மலர் வெளியீடு
சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வெளியிட மாண்புமிகு… pic.twitter.com/JlRnU0y8ox
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 28, 2023