Page Loader
UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை
யுபிஎஸ்சி: மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை

UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 22, 2025
05:20 pm

செய்தி முன்னோட்டம்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு நடக்கும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், தேசிய அளவில் 23வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். தமிழக மாணவர்களில், சிவச்சந்திரனுடன் தமிழ் மொழியில் தேர்வு எழுதிய காமராஜ் மற்றும் சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் சக்தி துபே, ஹர்ஷிதா காயல் மற்றும் கோங்ரே அர்சித் பராக் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 14,627 பேர் இரண்டாம் கட்டத்தேர்வுக்கு தகுதி பெற்றனர். செப்டம்பரில் இறுதி தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முதல்வர் பாராட்டு

தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, அதில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மூவருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; ஒவ்வொருவரும் முதல்வனாகும் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த நன்னிலை தருகிறது!" என்றும், "பல்லாயிரம் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலத்தில் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post