தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்புவரை ஜீரோ இடை நிற்றல்: மத்திய அரசின் ஆய்வறிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய பள்ளிக்கல்வித்துறை 2023-2024ம் கல்வியாண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டது. அதில் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில், நாம் பெருமைகொள்ளுவிதமாக தமிழ்நாட்டில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எந்த வகுப்பிலும் இடைநிறுத்தல் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் தமிழ்நாட்டில் 7.68 ஆக உள்ளது. மேலும், உயர்கல்வியில் குறைந்த இடைநிறுத்தல் விகிதம் கொண்ட மாநிலங்களில் கேரளா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களுடன் தமிழ்நாடும் இணைந்துள்ளது.
ஆய்வறிக்கை
பூஜ்ய இடைநிற்றலை பெற்ற மற்ற மாநிலங்கள் எவை?
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து மத்திய கல்வித் துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது.
2023-2024ம் கல்வியாண்டுக்கான ஆய்வில், தொடக்கக் கல்வி (1 முதல் 5ம் வகுப்பு) மற்றும் மேல்நிலை (6 முதல் 8ம் வகுப்பு) கல்வி தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தொடக்கக் கல்வியில், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, சண்டிகர், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடைநிறுத்தல் விகிதம் பூஜ்யம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மேல்நிலை கல்வியில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இடைநிறுத்தல் விகிதம் "ஜீரோ" ஆக உள்ளது.