Loading...
செப்டம்பர் 13 முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் நடிகர் விஜய்: 14 சனிக்கிழமைகள், 1 ஞாயிறு மட்டுமே பிரசாரம்
விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் தொடங்க உள்ளார்

செப்டம்பர் 13 முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் நடிகர் விஜய்: 14 சனிக்கிழமைகள், 1 ஞாயிறு மட்டுமே பிரசாரம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2025
03:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் தொடங்க உள்ளார். மொத்தம் 14 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். விஜயின் பிரசார சுற்றுப்பயணம், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், திட்டமிடப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 20-ஆம் தேதியுடன் இறுதியாக முடிகிறது. பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் விஜய், அக்டோபர் 5ஆம் தேதி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் பிரசாரம் செய்கிறார்.

அட்டவணை

பிரசார அட்டவணை விவரம்

செப்டம்பர் 13, 20, 27 (சனிக்கிழமைகள்):

திருச்சி

பெரம்பலூர்

அரியலூர்

நாகை

திருவாரூர்

மயிலாடுதுறை

திருவள்ளூர்

வடசென்னை

அக்டோபர் 4, 11, 18, 25 (சனிக்கிழமைகள்):

கோவை

நீலகிரி

திருப்பூர்

ஈரோடு

கன்னியாகுமரி

நெல்லை

தூத்துக்குடி

காஞ்சிபுரம்

வேலூர்

ராணிப்பேட்டை

தென்சென்னை

செங்கல்பட்டு

நவம்பர் 1, 8, 15, 22, 29 (சனிக்கிழமைகள்):

கிருஷ்ணகிரி

தர்மபுரி

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

தென்காசி

விருதுநகர்

கடலூர்

சிவகங்கை

ராமநாதபுரம்

டிசம்பர் 6, 13, 20 (சனிக்கிழமைகள்):

திண்டுக்கல்

தேனி

மதுரை

அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை):

கோவை

நீலகிரி

திருப்பூர்

ஈரோடு

ADVERTISEMENT