அமைச்சர் கீர்த்தனாவின் லண்டன் பயணம் ரத்து செய்ததன் உண்மையான காரணம் இதுதான்: கனிமொழி சந்தோஷ் MLA
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உடன் செல்லாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்துத் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் லண்டன் தொழில் முதலீட்டு பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும், தொழில்துறை செயலாளரும் பங்கேற்காதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் கீர்த்தனாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், செயலாளரின் வீட்டில் திருமணம் இருந்ததாலும் அவர்கள் பயணத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
கண்டனம்
MLA கனிமொழி சந்தோஷ் கண்டனம்
கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ்(X) தளத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.
"அமைச்சர் கீர்த்தனா தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையிலும், 4 நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத்திரும்பினார்"
"மருத்துவமனையில் இருந்தபோதும் முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் முறையாக நடக்கிறதா என்பதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது. ஒரு பெண் அதிகாரத்தில் இருக்கும்போது அவரது பணியை விமர்சிக்க முடியாதவர்கள், அவரது உடல்நிலையையும் இயற்கைச் சுழற்சிகளையும் கேலி செய்வது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு".
பெண்கள் வெறும் உடல் சுழற்சியால் மட்டும் வரையறுக்கப்படுபவர்கள் அல்ல என்றும், வலி மற்றும் காயங்களை கடந்து கடமையாற்றும் தலைவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், பெண்களை அவர்களின் சாதனைகளுக்காக மதிப்பதே சிறந்த அரசியல் பண்பாடு எனத்தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
As a woman, I want to say this because I witnessed it myself.
— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) September 22, 2026
I met my thangai Minister Keerthana at Kamatchi Hospital after her collarbone surgery. Doctors had advised around 20 days of rest, but within 4 days she was back at work because of her commitment to the state. Even… pic.twitter.com/hQ9DpOERvL