Loading...
TVK தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! முக்கிய முடிவுகளுடன் பனையூர் கூட்டத்தில் நடந்தது என்ன?
TVK தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு

TVK தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! முக்கிய முடிவுகளுடன் பனையூர் கூட்டத்தில் நடந்தது என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் TVK தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இக்கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி' (Secular Social Justice Victory Alliance) என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி, சட்டமன்றத்தலைவர் தாரகை கத்பர்ட், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வன்னி அரசு, ரவிகுமார், சிந்தனை செல்வன், மதிமுக தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ, ஐயுஎம்எல் கே.எம். காதர் மொகிதீன், ஏ.எம். ஷாஜஹான் மற்றும் சையத் பரூக் பாட்ஷா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

விவரங்கள்

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

கூட்டணி அரசமைந்த பிறகு நடைபெற்ற இரண்டாவது முக்கிய ஆலோசனைக் கூட்டமான இதில், கூட்டணிக்கான அமைப்பு முறை உருவாக்கப்பட்டது.

மேலும் பொது குறைந்தபட்சத் திட்டம் தயாரிப்பது, வழிகாட்டுதல்களுக்கான ஸ்டீயரிங் கமிட்டி அமைப்பது மற்றும் ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் அரசை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் தங்க நிற சட்டையும், வேட்டியும் அணிந்து கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சிகளின் லோகோக்கள் பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT