கருத்து கணிப்பில் மாபெரும் திருப்பம்! TVK விஜய்க்கு 120 இடங்களா?
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வெளியான எக்சிட் போல் முடிவுகளில் பல கருத்துக்கணிப்புகள் திமுக கட்சியே பெரும்பான்மை பெறும் என்றும், அடுத்து ஆட்சிக்கு வரவிருப்பது திமுக தலைமையிலான கூட்டணி தான் எனவும் கணித்துள்ளன. எனினும், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்று கூறியுள்ள நிலையில், பிரதீப் குப்தாவின் இந்த கணிப்பு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழகத்தில் ஒரு அரசியல் சுனாமியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
கணிப்பு
அரசியல் வரைபடத்தை மாற்றும் ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
வழக்கமாக எக்சிட் போல் கணிப்புகளில் துல்லியமான முடிவுகளை தரும் ஆக்சிஸ் மை இந்தியா, இம்முறை மற்ற கணிப்பாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. தவெக (TVK): 98 முதல் 120 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடிக்கும் விளிம்பிற்கு (117 இடங்கள்) வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி: 92 முதல் 110 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படலாம். அதிமுக கூட்டணி (NDA): 22 முதல் 32 இடங்களுக்குள் மிகக் கடுமையான சரிவைச் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முதல்முறை வாக்காளர்கள்
இளைஞர்களின் பேரலை: 68% முதல்முறை வாக்காளர்கள் ஆதரவு
விஜய்யின் இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய இளைஞர் சக்தி இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 18-19 வயது: முதல்முறை வாக்காளர்களில் 68% பேர் TVK கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 20-39 வயது: இந்த வயதினரிடையே 45% முதல் 59% வரை ஆதரவு கிடைத்துள்ளது. மாணவர்கள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் நிலவும் 'மாற்றம்' குறித்த வேட்கையே இந்தத் திடீர் திருப்பத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக யார் வரவேண்டும் என்ற மக்களின் விருப்பத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1. விஜய்: 37% வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2. மு.க. ஸ்டாலின்: தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு 35% பேர் ஆதரவு அளித்துள்ளனர்.