NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 நபர்களுக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 நபர்களுக்கும் என மொத்தம் 68,039 நபர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இளைஞர்கள்

    75,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

    மேலும், கடந்த சுதந்திர தின விழா உரையின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தவாறு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 75,000 இளைஞர்கள் பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் தொகுதி 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது.

    தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலி பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

    காலிப்பணியிடங்கள்

    டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

    கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வுகளை ஒப்பிடுகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301, தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகையில் முறையே 11949, 9684 மற்றும் 10139 என அதிகரிக்கப்பட்டுள்ளன.

    நடப்பாண்டை பொறுத்தவரையில் 6244 என அறிவிக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்கள், தற்பொழுது 6724 என அதிகரித்துள்ளது.

    இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

    தனியார் வேலைவாய்ப்பு

    தனியார் வேலைவாய்ப்பை பெருக்க நான் முதல்வன் திட்டம்

    அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முன்னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், "நான் முதல்வன்" திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    பயிற்சி

    27 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி

    தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27,73,847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்று தரும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் எக்ஸ் பதிவு

    கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/klPVKzae9F

    — TN DIPR (@TNDIPRNEWS) September 20, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிஎன்பிஎஸ்சி
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    டிஎன்பிஎஸ்சி

    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் தமிழ்நாடு செய்தி
    டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு தமிழகம்
    டிஎன்பிஎஸ் சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது; எப்படி பதிவிறக்கம் செய்வது? இந்தியா
    டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு தேர்வு

    தமிழக அரசு

    சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம் மெரினா கடற்கரை
    தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்  வந்தே பாரத்
    தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது! தமிழ்நாடு
    புத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம் புத்தக கண்காட்சி

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இனி அதிக ஹாரன் எழுப்பினால் ரெட் சிக்னல் மாறாது; சென்னையில் வருகிறது புது திட்டம் சென்னை
    பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள் விநாயகர் சதுர்த்தி

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன் தமிழகம்
    முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் 'தமிழ் வாழ்க' வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர்
    தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025