சட்டசபையில் தமிழக பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டசபையில் இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அவர்,"இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்"என்று கூறி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
அதில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அவை பின்வருமாறு:
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🔴LIVE: தமிழ்நாடு பட்ஜெட் நேரலை#SunNews | #TNBudget2025 | #TNBudgetWithSunNews https://t.co/ijJoP9rYEn
— Sun News (@sunnewstamil) March 14, 2025
பட்ஜெட் அறிவிப்புகள்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு
மூன்றாம் பாலினத்தவருக்கு போக்குவரத்து மேலாண்மை, ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்திட திட்டம்.
50 மூன்றாம் பாலினத்தவருக்கு முதற்கட்டமாக பயிற்சி.
500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒலைச்சுவடிகள் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழக பாடநூல் கழகத்திற்கு ரூ.120 லட்சம் ஒதுக்கீடு 193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
முதியவர்களுக்கான அன்புச்சோலைகள் நிறுவப்படும்
பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறைக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
மகளிர் நலன்
மகளிர் நலனுக்காக நிதி ஒதுக்கீடு
ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்.
சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்.
10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்ப்புற மேம்பாடு
நகர்ப்புற மேம்பாட்டுக்கான திட்டங்கள்
ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
சென்னை வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும்.
ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்ப்டுத்தப்படும்.
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும், இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்
வேலைவாய்ப்புகள்
புதிய வேலைவாய்ப்புகள் வழங்கும் புதிய திட்டங்கள்
ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்படுத்தப்படும்.
ரூ .100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் உருவாக்கப்படும்.