சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த முறை பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உரிமைத்தொகை 1,000 ரூபாயை 2,500 ரூபாயாக உயர்த்துவதுடன், ஆண்களுக்கான நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்படலாம் என்று ஊடங்கங்கள் கணிக்கின்றன.
இந்த முறை மேலும் ஒரு சிறப்பம்சமாக பட்ஜெட் அறிவிப்புகளை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்.. எதிர்பார்ப்புகள் என்னென்ன?#SunNews | #TNBudget2025 | #BudgetUpdatesWithSunNews | @mkstalin | @TThenarasu pic.twitter.com/4QJUDgTJmW
— Sun News (@sunnewstamil) March 14, 2025
எதிர்பார்ப்புகள்
தமிழக பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?
தற்போது, 1.15 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இதில், விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பு, இன்றைய பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.
அதோடு, மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன் ஆண்களுக்கான நலத்திட்ட உதவியையும் முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும், சரண் விடுப்பு பணம் வழங்கும் முறையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கலாம்.
ஒளிபரப்பு
மாநிலம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை, 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
குறிப்பாக, மக்கள் அதிகமாக இருப்பிடங்களான சந்தைகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்வை காலை 9:30 மணி முதல், இந்த 936 இடங்களில் எல்.இ.டி திரைகளில் ஒளிபரப்பப்படும்.
அதோடு, நாளை தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட் உரையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.