LOADING...
ஜெர்மனியில் ரூ.7,020 கோடி முதலீடுகளை உறுதி செய்யும் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உறுதி செய்த முதல்வர்
26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உறுதி செய்த முதல்வர்

ஜெர்மனியில் ரூ.7,020 கோடி முதலீடுகளை உறுதி செய்யும் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உறுதி செய்த முதல்வர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2025
01:05 pm

செய்தி முன்னோட்டம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் இன்று அவர் தனது ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்து, மாநிலத்திற்கு ரூ.7,020 கோடி முதலீடு மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி, TN RISING ஜெர்மனி முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது, ​​ரூ. 3,819 கோடி முதலீட்டு உறுதிமொழியுடன் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்பட்டன, மேலும் இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 9,070 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

MoU

பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்து

இது தவிர, மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நார்-பிரேம்ஸ் (ரூ. 2,000 கோடி முதலீடு மற்றும் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு), நார்டெக்ஸ் குழுமம் (ரூ. 1,000 கோடி முதலீடு மற்றும் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு) மற்றும் ஈபிஎம்-ஃபாஸ்ட் (ரூ. 201 கோடி முதலீடு மற்றும் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு) ஆகியவற்றுடன் கையெழுத்திடப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம், 7,020 ரூபாய் முதலீட்டு உறுதிமொழியுடன் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post