Page Loader
DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ்
DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை

DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2024
02:58 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர்சேட் உடன், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். DMK Files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, முதல் கட்ட பதிவை, DMK Files என்ற பெயரில் வெளியிட்டார் அண்ணாமலை. அதில், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கலைஞர் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களின் சொத்து மதிப்புகள் குறித்த பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் இடம் பெற்றிருந்தது.

card 2

2ஜி விசாரணை பற்றிய ஆடியோ பதிவை வெளியிட்டுள்ள அண்ணாமலை 

அண்ணாமலை முன்னதாக, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதாக அறிவித்த போது, அதற்கு முன்னதாக திமுகவின் ஊழல்களை வெளிகொண்டுவருவேன் என கூறினார். அதன் தொடர்ச்சியாகவே, DMK Files - 2 என்ற பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஒரு பெட்டி நிறைய புகார்களை அளித்தார். தற்போது அடுத்தகட்டமாக, DMK Files - 3 என்ற பெயரில் ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். இன்று வெளியிடபட்ட இந்த ஆடியோவில் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் நிறுவனம் குறித்து ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர் சேட்டிடம் பேசுவது போன்ற விவரங்கள் அடங்கியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை