Loading...
சட்டசபை தேர்தல் செலவு அறிக்கை: தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள்
தேர்தலுக்கான செலவு அறிக்கையை அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளது

சட்டசபை தேர்தல் செலவு அறிக்கை: தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
08:23 am

செய்தி முன்னோட்டம்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான செலவு அறிக்கையை அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது தி.மு.க.வின் வங்கி கணக்கில் ரூ.365.14 கோடி இருப்பு இருந்தது. தேர்தல் காலத்தில் நன்கொடை மூலமாக ரூ.126.27 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதில் பிரசாரத்திற்காக மட்டும் ரூ.149.89 கோடி செலவிடப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு ரூ.2.66 கோடியும், கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரத்திற்கு ரூ.3.24 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான செலவுகள் உட்பட மொத்தம் ரூ.197.84 கோடியை தி.மு.க. செலவிட்டுள்ளது. மேலும், PEN நிறுவனத்திற்கு ரூ.6.61 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவில் கட்சியின் கையிருப்பில் ரூ.319 கோடி உள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர கட்சிகள்

அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியின் செலவுகள்

அ.தி.மு.க. தரப்பில் தேர்தல் காலத்தில் ரூ.87.41 கோடி வருவாயாக பெறப்பட்டு, மொத்தம் ரூ.112.39 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 'பிரமான்யா ஸ்டிரேட்டஜி கன்சல்டிங்' என்ற நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மட்டும் ரூ.103.98 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நிறைவில் அ.தி.மு.க.விடம் ரூ.295.98 கோடி கையிருப்பு உள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு ரூ.2.20 கோடி வருவாய் கிடைத்த நிலையில், ரூ.1.37 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பாஜக-விற்கு தமிழகத்தில் ரூ.42.83 கோடி வருவாய் வரப்பெற்று, மொத்தம் ரூ.51.56 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அண்ணாமலை, குஷ்பு பிரசாரத்திற்கு மட்டும் ரூ.84.25 லட்சம் செலவாகியுள்ளது.

காங்கிரஸ் ஐந்து மாநில தேர்தல்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.248.55 கோடியைச் செலவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெற்றி பெற்ற தவெக-வின் தேர்தல் செலவு கணக்கு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT