தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி
கடைசிகட்ட வாக்குபதிவில், தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 2 PM: தமிழகத்தின் அனைத்து தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. முன்னதாக தருமபுரியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி மட்டும் முன்னிலை வகித்து வந்த நிலையில், அவரும் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து, திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில், திமுக-காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும், அதிமுக- தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகருக்கும் மாறி மாறி வெற்றி நிலை மாறி வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக 25.38% வாக்குகளைபெற்றுள்ளது. அதே நேரத்தில், முதன்முறையாக பாஜக 10.52% வாக்குகளை பெற்றுள்ளது.
திமுக கூட்டணி
10: 50 AM: தமிழகத்தில் 40-க்கு 38 இடங்களில், திமுக முன்னிலை. அதிமுக ஒரு இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. 10 AM: 10 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் விருதுநகர் தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவின் வேட்பாளரான விஜயபிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். அதேபோல நீலகிரி தொகுதியில் திமுகவின் அ.ராஜா முன்னிலை வகிக்கிறார். மறுபுறம் பாஜகவின் எல்.முருகன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கோவையில் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் அண்ணாமலை முன்னிலை வகிக்கிறார்.
கள நிலவரம்
9:20 AM: தமிழகத்தின் நட்சத்திர போட்டியாளர்களாக திமுகவின் TR பாலு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். மறுபுறம், பாஜக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணி, தர்மபுரி முன்னிலை வகிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.
திமுக முன்னிலை
8:45 am: 8:30 மணி நிலவரப்படி பல இடங்களில் தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரத்தின் (EVM ) VVPAT எண்ணிக்கை துவங்கியது. இது வரை, திமுக அங்கம் வகிக்கும் INDIA கூட்டணி பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வோட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கிய நயினார் நாகேந்திரன் நெல்லையில் முன்னிலை வகிக்கிறார். அதேபோல மதிமுக நிற்கும் ஒரே தொகுதியான திருச்சியில் துறை வைகோ முன்னிலை வகிக்கிறார். 8:00 am: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின்னரே வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.