
சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
2023-24ம் ஆண்டில் 18 வயதிற்குள்ளானவர்கள் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே 2,063 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இந்த தகவல்கள், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 2023-24ம் நிதியாண்டில் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டியதால், 11,890 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
விபத்து
சிறார் விபத்துகளில் தமிழகம் முதலிடம்
தமிழகத்தில், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டியதன் காரணமாக அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் 1,000க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் 645 விபத்துக்கள் நடந்துள்ளன.
ஆனால், லட்சத்தீவில் எந்தவொரு விபத்துகளும் பதிவாகவில்லை.
அபராத விவரங்கள்
அபராத வசூல் விவரங்கள்
நாடு முழுவதும், 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களிடமிருந்து போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதற்கான அபராதமாக ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பீஹாரில் அதிகபட்சமாக ரூ.44.27 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு அல்லது சிறுவர்களிடம் வாகனங்களை கொடுத்து ஓட்ட அனுமதித்தவர்கள் அதிகமாக உள்ளனர்.