Loading...
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலைஆய்வு மையம் தகவல்
இன்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்யக்கூடும்

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலைஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
05:25 pm

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று கோவையில் அதிகபட்சமாக 124 மி.மீ மழை பதிவாகிய நிலையில், மதுரையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலின் மேல் சுமார் 5.8 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல் வட தமிழகப் பகுதிகளின் மேல் 5.8 கி.மீ உயரத்தில் மற்றொரு சுழற்சியும், மன்னார் வளைகுடா முதல் மத்திய மகாராஷ்டிரா வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நிலவி வருகிறது.

மழை எச்சரிக்கை

மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கை

இன்று, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணி நேரத்திற்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும்.

அக்டோபர் 8 அன்று நீலகிரி மற்றும் கோவை மலைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT