தமிழகத்தில் நவம்பர் 8 வரை கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
'முரசு' புயலானது நள்ளிரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த போதிலும், தமிழகம், புதுவை மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தமிழகத்தில் வரும் நவம்பர் 8 வரை பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 5, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் மிதமழை பெய்யலாம்.
மற்ற நாட்கள்
அடுத்து வரும் நாட்களில் வானிலை அறிக்கை
நவம்பர் 6: மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 7: மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
நவம்பர் 8: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 9: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை
சென்னை & புறநகர் பகுதி வானிலை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்
நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 32°C - 33°C வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°C - 26°C வரையிலும் பதிவாக வாய்ப்புள்ளது.
மலைப்பகுதிகள் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.