தமிழகத்தில் 6 IAS அதிகாரிகள் இடமாற்றம்: புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் நியமனம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உள்துறைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் 6 மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக கார்த்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக உள்துறை செயலாளராக இருந்த மணிவாசன் ஐஏஎஸ், நில நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மின்சார வாரிய தலைவராக இருந்த அருண்ராய் ஐஏஎஸ், நிதித் துறை செலவின செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நில நிர்வாகத் துறை ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் மின்சார வாரிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
மாற்றம்
தேனி மாவட்டத்தின் 21வது ஆட்சியராக சிவகிருஷ்ணமூர்த்தி
நிதித் துறை செலவின செயலாளராக இருந்த எஸ். வெங்கடேஷ் ஐஏஎஸ், வேளாண் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த வைத்யநாதன் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ், தேனி மாவட்டத்தின் 21வது ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக (பணிகள்) பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம்
புதிய ஆட்சியருக்கு மேகமலை விவகாரம் சவாலாக அமையுமா?
பொதுவாக இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டம் அரசு அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்த மாவட்டமாக கருதப்பட்டாலும், தற்போது அங்கு வெடித்துள்ள மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு பிரச்சனை புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மக்களிடையே போராட்டமாக உருவெடுத்து வரும் இந்த விவகாரத்தில், அரசு சார்பில் துரித நடவடிக்கை எடுத்து அமைதியை ஏற்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
IAS Transfers & Postings
— Vignesh Theni (@Vignesh_twitz) October 9, 2026
Home Secretary Karthik IAS
TNEB Chairman - Rajesh Lakhoni pic.twitter.com/48LqkvAYjM