LOADING...
தமிழக முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்; யார் இந்த 'தி ரூட்' ஜெகதீஷ்?
தமிழக முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்

தமிழக முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்; யார் இந்த 'தி ரூட்' ஜெகதீஷ்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 23, 2026
07:32 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிக முக்கியமான நகர்வாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக 'The Route' நிறுவனத்தின் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததற்கு பின்னால் இருந்த ஜெகதீஷின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பயணம்

18 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகன்; இன்று தனிச் செயலாளர்

தன் புதிய பொறுப்பு குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள ஜெகதீஷ் பழனிசாமி, "18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த தீவிர ரசிகனாக நான் இருந்தேன். இன்று, மாநில முதலமைச்சரின் தனிச் செயலாளராக உங்கள் அருகில் நிற்கும் இந்தத் தருணம், என் வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்த்துகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், தங்களின் கடினமான காலங்களில் உத்வேகம் அளித்த 'தளபதி விஜய் அண்ணாவிற்கு' தனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

விவரம்

யார் இந்த ஜெகதீஷ் பழனிசாமி?

திரைத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஜெகதீஷ் பழனிசாமி, கடந்த 2020-ஆம் ஆண்டு 'The Route' என்ற முன்னணி டேலண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். சினிமா உலகிற்குள் விஜய்யின் நிழலாக வலம் வந்த இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' ஆகிய படங்களின் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தவெக கட்சியின் ஐடி விங் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களை ஜெகதீஷின் 'தி ரூட்' நிறுவனமே முழுமையாகக் கையாண்டது. மேலாளராக இருந்து, தேர்தல் காலத்தில் விஜய்யின் முதன்மை வியூக வகுப்பாளராக செயல்பட்ட ஜெகதீஷ் பழனிசாமியின் இந்த வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement