நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.
அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி 2 நபர்கள் நுழைந்து புகை குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதனிடையே அவர்கள் இருவரை கைது செய்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ளது என்றும்,
இன்று புகை குண்டுடன் 2 பேர் நுழைந்த நிலையில், நாளை துப்பாக்கியோடு தீவிரவாதிகள் ஏன் நுழையமாட்டார்கள்? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதல்வர்
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
இந்நிலையில், 'இச்சம்பவம் ஜனநாயக கோவிலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 'முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும் இது நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது' என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்று உடனே விசாரணையினை துவங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, அனைத்து வலிமைகளையும் பயன்படுத்தி நாட்டின் முக்கிய அமைப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுகோள் விடுப்பதாகவும் கோரியுள்ளார்.