Loading...
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை: 2 ஆண்டுகளுக்கு தனியாருக்கு டெண்டர் அறிவித்தது தமிழக அரசு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையை 2 ஆண்டுகளுக்கு தனியாருக்கு டெண்டர் அறிவித்தது தமிழக அரசு.

சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை: 2 ஆண்டுகளுக்கு தனியாருக்கு டெண்டர் அறிவித்தது தமிழக அரசு

எழுதியவர் Vasuki
Nov 11, 2026
01:15 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகளை மல்டி கேமரா தொழில்நுட்ப வசதிகளுடன் முழுமையாகப் பதிவு செய்து, செயற்கைக்கோள் செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கான பணிகளுக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை புதிய மின்னணு ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது. மக்களாட்சியின் மாண்பை பேணும் வகையிலும், பேரவை விவாதங்களை பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்த காலமும் தொழில்நுட்ப பணிகளும்

வெளியிடப்பட்டுள்ள டெண்டர் விதிமுறைகளின்படி, வரும் 2027 ஜனவரி முதல் 2028 டிசம்பர் வரையிலான 2 ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்.

அதிநவீன மல்டி லெவல் கேமராக்கள் மூலம் சட்டசபையின் மொத்த அமர்வுகளையும் பதிவு செய்வதுடன், காட்சிகளுக்கான பிந்தைய தயாரிப்புப் பணிகளையும் மேற்கொண்டு, செயற்கைக்கோள் அலைவரிசைகள் மற்றும் இணையதள ஊடகங்களில் தடையின்றி உடனடி ஒளிபரப்பு செய்யும் வகையில் காட்சிகளை வழங்க வேண்டும்.

இதில் தடையற்ற நேரலைக்காக குதியான தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு முழுவீச்சில் களமிறக்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

டெண்டர்

இணையதளத்தில் விண்ணப்பிக்க புதிய அழைப்பு

சட்டமன்ற நிகழ்வுகளுக்காக ஓர் ஆண்டுக்கு 80 நாள்கள் வீதம், 2 ஆண்டுகளில் மொத்தம் 160 நாள்கள் நேரலைக் கவரேஜ் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளின் விவாதங்கள், கேள்வி-பதில் நேரங்கள், மானியக் கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடுநிலைத்தன்மையுடன் மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தனியார் நிறுவனங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கவுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள தகுதியான நிறுவனங்கள், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தப்புள்ளி இணையதளமான tntenders.gov.in வழியாக முழு விவரங்களையும் பெற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT