Loading...
தூய்மையான நகரங்கள் விருது 2025-26: நவி மும்பை முதலிடம்! தமிழகத்தின் தூய்மையான நகரம் எது?
தமிழகத்தின் தூய்மையான நகரமாக தேனி மாவட்டத்தை சேர்ந்த அல்லிநகரம் தேர்வு

தூய்மையான நகரங்கள் விருது 2025-26: நவி மும்பை முதலிடம்! தமிழகத்தின் தூய்மையான நகரம் எது?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
11:46 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2025-26-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த மத்திய பிரதேசத்தின் இந்தூரை பின்னுக்குத் தள்ளி, மகாராஷ்டிராவின் நவி மும்பை இந்தியாவின் தூய்மையான நகரமாக முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது.

தரவரிசை

தேசிய அளவிலான முக்கிய விருதுகள்

2016-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10-வது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுக்காக, நாடு முழுவதும் 4,751 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதல் 3 இடங்கள்(ஒட்டுமொத்த பிரிவு): நவி மும்பை, குஜராத்தின் சூரத், விஜயவாடா.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்: விசாகப்பட்டினம், ஜபல்பூர், லக்னோ.

3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை: உஜ்ஜையின், சண்டிகர், குண்டூர்.

50 ஆயிரம் முதல் 3 லட்சம் மக்கள் தொகை: திவாஸ், டெல்லியின் NDMC, சாகர்.

20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் தொகை: விதா, அஸ்கா, பானாஜி.

20 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை: பிஹா, பஞ்ச்கனி, புத்னி.

சிறப்பு பிரிவு

சிறப்பு பிரிவுகளில் வென்ற நகரங்கள்

புவியியல் அமைப்புகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சிறப்பு பிரிவுகளிலும் பல்வேறு நகரங்கள் விருதுகளை தட்டிச் சென்றன.

தூய்மையான நதிக்கரை நகரங்கள்: ரேவா (மத்தியப் பிரதேசம்), பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்), வாரணாசி (உத்தரப் பிரதேசம்).

தூய்மையான இமயமலை நகரங்கள்: ருத்ரபூர் (உத்தரகண்ட்), ஜம்மு மற்றும் சோபியான் (ஜம்மு-காஷ்மீர்).

தூய்மையான கடற்கரை நகரங்கள்: பூரி (ஒடிசா - முதலிடம்), ஆலப்புழா (கேரளா), ரத்தினகிரி (மகாராஷ்டிரா).

இந்த தேசிய அளவிலான தூய்மை போட்டியில், தமிழகத்தின் தூய்மையான நகரமாக தேனி மாவட்டத்தை சேர்ந்த அல்லிநகரம் தேர்வு செய்யப்பட்டு பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த தூய்மையான நகருக்கான இந்த விருதை அல்லிநகரம் நகராட்சி ஆணையர், குடியரசுத் தலைவர் முர்முவின் கைகளால் நேரில் பெற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT