தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது நாளை 'மிக்ஜம்' புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வரும் 5ஆம் தேதி அன்று ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையில் உள்ள கடற்கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு சில தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 2 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி
டிசம்பர் 3
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் டிசம்பர் 4 வட தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி
டிசம்பர் 5
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.