4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சமீபத்தில் பிடிபட்டார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள சுசனா சேத்(39), துண்டு அல்லது தலையணையைப் பயன்படுத்தி தனது மகனின் மூச்சை நிறுத்தி கொன்றதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதே பரிசோதனையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், சிறுவனின் கொலை திட்டமிடப்பட்டதாக தெரிகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து அவர் தனது மகனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு சுசனா சேத் மீது சந்தேகம் வரவே அவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீஸார் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சுசனா சேத்தை பிடித்தனர்.
ட்ஜ்கவ்ன்
சுசனா சேத்தின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட இருமல் சிரப் பாட்டில்கள்
அவரை எப்படி போலீஸார் திறமையாக பிடித்தனர் என்பதன் முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கொலை எதற்காக நடந்தது என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நான்கு வயது சிறுவனை அவனது தாயார் சுசனா சேத் கொலை செய்தது திட்டமிட்டு நடந்ததாக போலீசார் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து சில காலியான இருமல் சிரப் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அதுவும் சிறுவனின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையின் போது, சுசனா சேத், கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். மேலும், தான் தூங்கி எழுந்த போது குழந்தை இறந்து கிடந்தது என்றும் கூறியுள்ளார்.
டித்ஹப்கஜ்க்வ்
பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்டது சிறுவனின் உடல்
அந்த நான்கு வயது சிறுவனின் தந்தை வெங்கட் ராமன், தனது குழந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் செவ்வாய்க்கிழமை மாலை ஜகார்த்தாவிலிருந்து இந்தியா திரும்பினார்.
வெங்கட் ராமன், கர்நாடகாவின் சித்ரதுர்காவுக்கு வந்ததும், தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்தார்.
இன்று அவரது மகனின் உடல் பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்டது.
கோவாவின் மபுசா நகர நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
சிஇஓ சுசனா சேத்தும் அவரது கணவர் வெங்கட் ராமனும் பிரிந்துவிட்டனர். தற்போது விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.