NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஷாருக்கான் கொலை மிரட்டல் வழக்கு: திருடப்பட்ட தொலைபேசியிலிருந்து அழைப்பா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஷாருக்கான் கொலை மிரட்டல் வழக்கு: திருடப்பட்ட தொலைபேசியிலிருந்து அழைப்பா?
    ஷாருக் கொலை மிரட்டல் வழக்கில் புதிய திருப்பம்

    ஷாருக்கான் கொலை மிரட்டல் வழக்கு: திருடப்பட்ட தொலைபேசியிலிருந்து அழைப்பா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 07, 2024
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு எதிரான கொலைமிரட்டல் வழக்கில் புதிய திருப்பமாக, மிரட்டல் அழைப்பு விடுத்த தொலைபேசியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் தனது மொபைல் திருடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    சத்தீஸ்கரின் ராய்ப்பூரைச் சேர்ந்த அந்த நபர், நவம்பர் 2ஆம் தேதி தனது தொலைபேசியை இழந்ததாகவும், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்ததாகவும் CNN-News18 க்கு தெரிவித்தார்.

    ஷாருக்கானுக்கு மிரட்டல் அழைப்பை செய்ய யாரோ ஒருவர் தனது தொலைந்த எண்ணை தவறாக பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

    அறிக்கை

    'மும்பை போலீசார் இன்று காலை எனது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்...'

    அந்த நபர் செய்தி சேனலிடம்,"யாரோ எனது தொலைந்த எண்ணை தவறாக பயன்படுத்தி இந்த மிரட்டல் அழைப்பை விடுத்துள்ளார். மும்பை போலீசார் இன்று காலை வந்து எனது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்" என்று கூறினார்.

    "உங்கள் எண்ணிலிருந்து மிரட்டல் அழைப்பு வந்ததாக மும்பை போலீசார் என்னிடம் கூறினார், நவம்பர் 2ஆம் தேதி எனது மொபைல் தொலைந்துவிட்டதாக அவர்களிடம் சொன்னேன், மேலும் உள்ளூர் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

    விசாரணை முன்னேற்றம்

    ஷாருக்கானுக்கு வந்த மிரட்டல் அழைப்பு ராய்ப்பூரில் இருந்து வந்தது

    ஷாருக்கானுக்கு வந்த மிரட்டல் அழைப்பு ராய்பூரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    தன்னை "இந்துஸ்தானி" என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்த அழைப்பாளர், நவம்பர் 5ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு ஷாருக்கானின் இல்லமான மன்னத்திற்கு வெளியே இருப்பதாகக் கூறினார்.

    அவர் ₹50 லட்சம் பணம் கேட்டதோடு, தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நடிகரை கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்.

    அடையாளம் தெரியாத நபர் மீது மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் IPCயின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷாருக்கான்
    கொலை
    பாலிவுட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஷாருக்கான்

    'ஜவான்' படத்தின் 'வந்த எடம்' பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது  விஜய் சேதுபதி
    ஜவான் படத்தின் இரண்டாவது பாடல், 'ஹையோடா' வெளியானது பாடல் வெளியீடு
    'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள் இயக்குனர்
    அட்லீ- ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை வைரலாகி வருகிறது ஷாருக் கான்

    கொலை

    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  உத்தரப்பிரதேசம்
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம்  கர்நாடகா
    பிளாட்பாரத்தில் இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை மதுரை

    பாலிவுட்

    பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி நடிகைகள்
    'ஜவான்' படத்திற்கு பிறகு மற்றுமொரு ஷாருக்-அனிருத் காம்போ! அனிருத்
    சாய்பல்லவி நடிக்கும் ராமாயணம் இரண்டு பாகங்களைக் கொண்ட காவியமாக உருவாகிறது, மூன்று பாகங்கள் அல்ல! சாய் பல்லவி
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி ஷாருக்கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025