சல்மானை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கும் ₹ 50 லட்சம் கேட்டு கொலைமிரட்டல்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, மும்பை காவல்துறையின் லேண்ட்லைன் எண்ணில் மிரட்டல் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மும்பை பாந்த்ரா காவல்துறையினர் மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது சைபர் போலீசுடன் இணைந்து பாந்த்ரா காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் 308 (4) மற்றும் 351 (3)(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
CNBC தகவலின் படி, ஆரம்பகட்ட விசாரணையில் சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தான் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக சந்தேகிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Actor Shah Rukh Khan has received a death threat, the Mumbai police confirmed. While the Mumbai police has registered a case against an unidentified person for now, reports suggest that a Chhattisgarh resident is suspected of making the threat. #Watch#srk #shahrukhkhan… pic.twitter.com/pjt7XP5ecn
— CNBC-TV18 (@CNBCTV18News) November 7, 2024
கொலை மிரட்டல்
சமீப காலங்களாக பாலிவுட் பிரபல நடிகர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடப்படுகின்றன
சமீப மாதங்களில் சக நடிகரான சல்மான் கானுக்கு இதே போன்ற மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது.
அழைப்பாளரைக் கண்டுபிடித்து நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
"பாந்த்ரா காவல் நிலையத்திற்கு ஷாருக்கானை மிரட்டி ₹ 50 லட்சம் கேட்டு அழைப்பு வந்தது. குற்றம்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தற்போது மும்பை காவல்துறையின் ஸ்பெஷல் குழுக்கள் சத்தீஸ்கருக்கு புறப்பட்டு , விசாரணை நடத்தி வருகிறது.