
தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 3 முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கம்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து முன்பதிவு இல்லாத 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூர்-திருச்சி சிறப்பு ரயில் இன்று (அக்டோபர் 30) இரவு 9.10 மணிக்கு புறப்படும். இது நாளை அதிகாலை 5.45 மணிக்கு திருச்சியை அடையும்.
அந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக செல்லும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் குவியும் பொதுமக்கள்
— Sun News (@sunnewstamil) October 30, 2024
பொதுமக்கள் வசதிக்காக இன்று இரவு 9.10 மணிக்கு எழும்பூர் - திருச்சி வரையும், இரவு 12.30 மணிக்கு தாம்பரம் - திருச்சி வரையும், சென்ட்ரல் - கோவை போத்தனூருக்கு இரவு 10.10க்கும்… pic.twitter.com/avUVWqp6Iw
விவரங்கள்
சிறப்பு ரயில் விவரங்கள்
அதோடு, தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியாக திருச்சி சென்றடையும் மற்றொரு ஒரு சிறப்பு ரயில் (06157) இயக்கப்படும்.
மறுமார்கமாக நாளை (அக்டோபர் 31) பிற்பகல் 12 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை வழியாக திருச்சிக்கு மற்றொரு சிறப்பு ரயில் (06155) இயக்கப்படும்.
அதேபோல சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில்(06159), சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியாக கோவை போத்தனுர் சென்றடையும்.