LOADING...
பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது

பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே

எழுதியவர் Venkatalakshmi V
Sep 17, 2025
08:27 am

செய்தி முன்னோட்டம்

தெற்கு ரயில்வே, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று(செப்டம்பர் 17) காலை 8:00 மணிக்கு தொடங்கியது. இது தவிர, திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே இயங்கி வரும் வந்தே பாரத் ரயில் சேவை, பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டு, செப்டம்பர் 24 முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும். திருநெல்வேலியிலிருந்து காலை 6:05 மணிக்கு கிளம்பி மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், மதியம் 2:45 மணிக்கு எழும்பூரில் கிளம்பி இரவு 10:30 மணிக்குத் திருநெல்வேலி சென்றடையும்.

விவரங்கள்

சிறப்பு ரயில்களின் விவரங்கள்

நாகர்கோவில் -தாம்பரம்: நாகர்கோவில்(06012): செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 11:15 மணிக்குக் கிளம்பி மறுநாள் மதியம் 12:30 மணிக்குத் தாம்பரம் சென்றடையும். தாம்பரம்(06011): செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 27 வரை, ஒவ்வொரு திங்கள்கிழமையும் மதியம் 3:30 மணிக்குக் கிளம்பி மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். செங்கோட்டை-சென்னை சென்ட்ரல்: சென்னை சென்ட்ரல்(06121):செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 22 வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம் 3:10 மணிக்குக் கிளம்பி மறுநாள் காலை 6:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டை(06122):செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9:00 மணிக்குக் கிளம்பி மறுநாள் காலை 11:30 மணிக்குச் சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post