
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை
செய்தி முன்னோட்டம்
செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பண்டிகை நாள் கூட்டத்தினை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் வசதிக்காகவும், கொச்சுவேலி வீக்லி எக்ஸ்பிரஸ் (06083) ரயிலின் சேவைகள் நீடிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, கொச்சுவேலியிலிருந்து, கோவை, ஈரோடு, சேலம் மார்கமாக பெங்களூரு செல்லும் ஸ்பெஷல் ட்ரெயின், செப்டம்பர் மாதத்தில் 3ஆம் தேதி, 10ஆம் தேதி ,17ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
அதேபோல, பெங்களுருவில் இருந்து கிளம்பும் கொச்சுவேலி வீக்லி எக்ஸ்பிரஸ் (06084) சேவைகள் செப்டம்பர் 4ஆம் தேதி, 11ஆம் தேதி, 18ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதிகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Continued Running of special trains to clear extra rush during #Onam #Festival as follows
— Southern Railway (@GMSRailway) August 27, 2024
Advance Reservation for the above Special #Trains are open from #SouthernRailway End pic.twitter.com/tlZPIepr4l