
சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா?
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வார தொடக்கத்தில், ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும், அரசாங்கம் தான் இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் தான் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பின் போது என்ன கூறப்பட்டது என்பதை இப்போது பார்க்கலாம்.
பிஜிவெக்
ஒரே பாலின திருமண மனுக்கள் மீதான விசாரணை
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்தது.
இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பத்து நாள் மாரத்தான் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை இந்த வாரம் வழங்கினர்.
ஒரே பாலின திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், பிற நீதிபதிகள் ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர்.
டவ்க்ங்கள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த மூன்று முக்கிய விஷயங்கள்
1. இந்திய அரசியலமைப்பிற்கு கீழ் திருமணம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்பதை ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர்.
2. சிறப்பு திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்/பெண்(அவள்/அவன்) என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு, பாலினம்-சாராத வார்த்தைகளை(அவர்/நபர்) சேர்க்க முடியாது என்று ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர்.
சிறப்பு திருமண சட்ட விதிகளை ரத்து செய்வது, கலப்பு மணம் செய்து கொள்ளும் தம்பதிகளை பாதிக்கும் என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும், சிறப்பு திருமண சட்டத்தில் பாலினம்-சாராத வார்த்தைகளை சேர்ப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு தான் உரிமை உள்ளது என்றும் கூறப்பட்டது.
3. எனினும், ரேஷன்-கார்டு, ஓய்வூதியம் மற்றும் வாரிசு பிரச்சினைகள் போன்ற ஒரேபாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டது.
தில்னவ்க்
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருக்கும் பிரச்சனைகள்
இந்தியாவின் பால்புதுமையினர்களுக்கு(LGBTQIA+) என்ன உரிமைகளை வழங்க முடியும் என்பதை ஆராய உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்வு திருப்திகரமாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த குழுவை எப்போது, எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும், எத்தனை நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற கால வரம்புகளையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை.
எனவே, இந்த குழு அமைக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அப்படியே இந்த குழு அமைக்கப்பட்டாலும், இது என்ன உரிமைகளை வழங்க முடியும் என்பதை ஆராய்வதற்கான குழு தானே தவிர, பால்புதுமையினருக்கு உரிமைகளை வழங்கும் குழு அல்ல என்பதையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
பிகியூட்ஜ்
ஏன் இந்த தீர்ப்பு இந்தியாவை பின் நோக்கி இழுத்து செல்கிறது?
குயர்(LGBTQIA+) மக்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்பட கூடாது. இந்திய மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
எனினும், உச்ச நீதிமன்றமே அந்த மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக வாதிடுகின்றனர் சில மனித உரிமை ஆர்வலர்கள்.
எனவே, குழந்தைகள் திருமண ஒழிப்பு, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, மறுமண அங்கீகாரம் போன்ற பெரும் வழக்குகளுக்கு நீதி வழங்கிய இந்தியா, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான அதே இந்தியா, பாலின சிறுபான்மையினருக்கு நீதி வழங்கும் விஷயத்தில் நேபாளம், தைவான் போன்ற சிறிய ஆசிய நாடுகளைவிட பின்தங்கி இருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது.