LOADING...
ரயில் நிலையங்களில் இனி 'சலூன்' வசதி: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே அதிரடி!
ரயில் நிலையங்களில் 'சலூன்' வசதி

ரயில் நிலையங்களில் இனி 'சலூன்' வசதி: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே அதிரடி!

எழுதியவர் Vasuki
Apr 27, 2026
07:33 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய ரயில்வே துறை, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய ரயில் நிலைய வளாகத்திலேயே 'சலூன்' வசதியை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பயணிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்

அலுவலகப் பணியாளர்களுக்கு வசதி:

அவசர வேலையாக அல்லது விசேஷங்களுக்குச் செல்லும் பயணிகள், ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று சலூன் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. நீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்பவர்களின் தேவையை மனதிற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரயிலுக்காகக் காத்திருக்கும் பயணிகள் தங்களது காத்திருப்பு நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கும். தினசரி ரயிலில் பயணிக்கும் அலுவலகப் பணியாளர்கள், வேலைக்குச் செல்லும் முன்போ அல்லது திரும்பும் வழியிலோ இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விசேஷ நிகழ்ச்சிகளுக்காகவோ வெளியூர் செல்பவர்கள், ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து சலூன் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது.

பீகாரில் முதற்கட்டமாக அமல்:

தனியார் பங்களிப்பு

இந்தத் திட்டம் முதற்கட்டமாகப் பீகார் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய ரயில் நிலையங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்தச் சலூன் கடைகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடத்தப்படும். இதற்காக 3 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். கடைகளில் சரியான தரநிலைகள் மற்றும் சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா என்பதை ரயில்வே அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பார்கள். பீகாரில் தொடங்கப்படும் இந்த முன்மாதிரி வெற்றி பெறும் பட்சத்தில், நாடு முழுவதும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில்சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி விரைவில் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது. பயணிகள் மட்டுமின்றி, ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் தினசரி அலுவலகம் செல்பவர்களுக்கும் இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

Advertisement

இந்திய ரயில்வே

வேலைவாய்ப்பு மற்றும் வருவாய்:

இந்த திட்டத்தின் மூலம் ரயில்வேக்கு வருவாய் கிடைப்பதோடு, உள்ளூர்வாசிகளுக்கும், சிறு தொழில் முனைவோருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உணவு, மருத்துவம், வைஃபை போன்ற வசதிகள் உள்ள நிலையில், சலூன் வசதியும் சேர்வது ரயில் நிலையங்களை நவீனமான இடமாக மாற்றும். ரயில் பயணம் என்பது வெறும் போக்குவரத்து மட்டுமல்ல, அது ஒரு சுகமான அனுபவமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் இந்த முயற்சிக்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement