Loading...
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரி டெல்லியில் ராகுல், பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் கைது
டெல்லியில் ராகுல், பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் கைது

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரி டெல்லியில் ராகுல், பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
09:47 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பணிவிலகக் கோரியும், தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளில் அக்கிரமங்கள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி, டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நடத்திய பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தின் போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' (INDIA) கூட்டணி எம்.பி-க்கள் பேரணியாகப் புறப்பட்டனர். எனினும், காவல்துறையினர் பேரணியை வழிமறித்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கைது

10 எம்.பி-க்கள் உட்பட 260 பேர் கைது

தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்கும் வரை இவ்விடத்தை விட்டு நகரப் போவதில்லை என ராகுல் காந்தி உறுதியளித்துப் போராட்டம் நடத்தினார்.

கிட்டத்தட்ட 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நடவடிக்கையாகத் டெல்லி காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றத் தொடங்கினர்.

10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 260 பேர் அகற்றப்பட்டு வெவ்வேறு காவல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கிங்ஸ்வே கேம்ப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ராகுல் காந்தியை பெருமளவிலான காவல் துறையினர் சூழ்ந்து, பேருந்தில் அழைத்துச் சென்ற காட்சிகளை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT