பொங்கலுக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
செய்தி முன்னோட்டம்
பொங்கல் பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயன்படுகின்றனர்.
இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் முன்பதிவு நிரம்பிய நிலையில், பேருந்துகளிலும் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.
மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. இதில் கடந்த 3 நாட்களில் மட்டும் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், 12.01.2025 அன்று மாலை 12 மணி நிலவரப்படி, 2,092 வழக்கமான பேருந்துகளுடன், 1,858 சிறப்பு பஸ்களையும் சேர்த்து மொத்தம் 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை, மொத்தமாக 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!#SunNews | #OmniBus | #Chennai | #Pongal pic.twitter.com/7xwGJjpEEB
— Sun News (@sunnewstamil) January 13, 2025
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்!#SunNews | #Pongal2025 | #Bhogi2025 pic.twitter.com/LTifgZIU4F
— Sun News (@sunnewstamil) January 13, 2025
விவரங்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் விவரங்கள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 5,736 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக, 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 15ஆம் தேதி முதல் 19 வரை தினசரி இயக்கக் கூடிய 10,480 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து கிளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.