Page Loader
தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது
தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 18, 2024
08:46 am

செய்தி முன்னோட்டம்

நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. அதன் பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி, நாளை மாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மாலை 4.55 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து, ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வருகிறார். வழியில், பாஜக கட்சி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு தர திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, ராஜ் பவன் செல்லும் பிரதர் மோடி, அங்கே இரவு ஓய்வெடுக்கிறார்.

card 2

திருச்சி, ராமேஸ்வரம் செல்லும் பிரதமர்

மறுநாள் காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார் மோடி. அங்கே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, அங்கே நடைபெறும் நிகழ்வுகளையும் கலந்து கொள்கிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரத்திற்கு பயணமாகிறார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகு, இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ராமேஸ்வரத்தில் அன்று இரவு தங்கும் பிரதமர், அடுத்த நாள் காலை அக்னீ தீர்த்த கரையில் குளிக்கிறார். பின்னர் அரிச்சல் முனை சென்று கோதண்ட ராமர் கோவிலில், ராமர் பாதை என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார். இதனை தொடர்ந்து மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து விமானத்தில், மதியம் 12.30 மணியளவில் டெல்லிக்கு புறப்படுகிறார்.