Page Loader
ஆபரேஷன் சிந்து: போரினால் சிக்கிய ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்

ஆபரேஷன் சிந்து: போரினால் சிக்கிய ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 19, 2025
08:04 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்ட 100 இந்திய மாணவர்களை இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். வியாழக்கிழமை அதிகாலை டெல்லிக்கு அவர்கள் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ் இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம் 110 மாணவர்களும் ஈரானின் தெஹ்ரானில் இருந்து ஆர்மீனியாவிற்கு எல்லையைக் கடந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தகவல்

வெளியுறவுத்துறை கூறுவது என்ன?

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய தூதரகம் மேற்கொண்ட ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. போக்குவரத்தில் தன்னிறைவு பெற்ற மற்ற குடியிருப்பாளர்களும் வளர்ந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நகரத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக MEA தெரிவித்துள்ளது. ஜூன் 15 அன்று தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் புதுப்பிப்புகளுக்காக தொடர்பில் இருக்கவும் ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

எல்லைகள்

மக்கள் பாதுகாப்பாக வெளியேற நில எல்லைகளை திறந்த ஈரான் 

இந்தியாவின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் அதன் நில எல்லைகள் வழியாக பாதுகாப்பான வெளியேற்ற பாதையை உறுதி செய்தது. மாணவர்கள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் வழியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் கிட்டத்தட்ட 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உயர்கல்வி பயிலும் மாணவர்கள்- முதன்மையாக மருத்துவம் மற்றும் பிற தொழில்முறை துறைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இன்னும் சிக்கித் தவிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய அரசாங்கம் ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.