தமிழ்நாடு இன்னும் பாஜகவுக்கு எட்டா கனியா? MOTN கருத்துக் கணிப்பு கூறுவது என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியா டுடே-சி-வோட்டர் மனநிலை கருத்துக் கணிப்புப்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் தமிழகம் பாஜகவிற்கு எட்டா கனியாகவே இருக்கிறது என தெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்புபடி, காவி கட்சிக்கு பூஜ்ஜிய இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், வாக்குப் பங்கில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், தமிழகத்தின் தெற்கு கோட்டையை பாஜக உடைக்கத் தவறிவிட்டது என்பதே உண்மை.
எனினும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 மக்களவைத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறும் என்று MOTN கணக்கெடுப்பு கணித்துள்ளது. பாஜகவும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் பூஜ்ஜிய இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% அதிகரிப்பு!#SunNews | #CVoter | #INDIAAlliance | @mkstalin pic.twitter.com/23iOehiVjt
— Sun News (@sunnewstamil) February 13, 2025
கூட்டணி
பாஜக வெற்றி பெற கூட்டணி மட்டுமே ஒரே வழி
இருப்பினும், பாஜக தமிழகத்தில் தனது நிலைப்பாட்டை உறுதி செய்ய கூட்டணி அமைப்பதே ஒரே வழியாக கருத்து கணிப்பு கூறுகிறது.
குறிப்பாக பாஜக, அதிமுக மற்றும் விஜய்யின் கட்சியுடன் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே, திமுகவை சவால் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தனர்.
"அண்ணாமலையின் தலைமையுடன் பாஜக 20% என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதைத் தாண்டி முன்னேறி திமுகவை சவால் செய்வது பாஜகவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்," என்று அரசியல் நிபுணர் அந்த கருத்துக்கணிப்பில் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.