நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்
செய்தி முன்னோட்டம்
நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.
இதே போன்ற விமான பயணங்களை மேற்கொள்வதற்காக, ஏறக்குறைய 600 இந்தியர்கள் துபாயில் காத்திருப்பதாகவும், தற்போது இந்த செயல் திட்டம் அம்பலப்பட்டு விட்டதால், இவர்களை இந்தியா திரும்பும்படி முகவர்கள் வலியுறுத்தியதாக, பஞ்சாப் முகவர் தெரிவித்துள்ளார்.
2nd card
"500-600 இந்தியர்கள் வரை துபாயில் இருக்கலாம்"
"தற்போது இந்த செயல் திட்டம் வெளியில் தெரிந்துவிட்டது. அன்புள்ள முகவர்கள் அவர்களை தாயகம் திரும்ப கூறியுள்ளனர். எனக்கு கிடைத்த தகவலின் படி, 500-600 இந்தியர்கள் வரை அங்கு இருக்கலாம்" என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளிடம் தெரிவித்தார்.
மேலும், இப்போது தரையிறக்கப்பட்டுள்ள விமானம் இந்த ஆண்டு மட்டும் நிகரகுவாவிற்கு சென்ற, இதுபோன்ற மூன்றாவது விமானம் எனவும் கூறியுள்ளார்.
கொலம்பியா மற்றும் பனாமா இடையே எல்லையில் பரவியிருக்கும் அடர்ந்த மற்றும் அபாயகரமான மழைக்காடுகளால் டேரியன் கேப் பகுதியை தவிர்த்து,
சட்டவிரோத குடியேறிகள் நிகரகுவா மற்றும் எல் சால்வடோரிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.
நிகரகுவா மற்றும் எல் சால்வடாருக்கு இருக்கும் நேரடி விமானங்கள் மூலம், அமெரிக்காவிற்குள் செல்லும் சட்டவிரோத பயணத்தை, அவர்களால் பாதுகாப்பாக மேற்கொள்ள முடிகிறது.
3ரd card
அதிக பணம் சம்பாதிக்க திட்டத்தை கசிய விட்ட முகவர்கள்
பிரான்ஸ் நாட்டில் பிடிக்கப்பட்ட விமானம், அங்கு எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்ட நிலையில், அது ஆட்கடத்தல் விமானம் என அதிகாரிகளுக்கு எப்படியோ தெரிந்து, அதில் சோதனை இட்டதாக, பஞ்சாப்பை சேர்ந்த முகவர் தெரிவித்தார்.
"விமானத்தில் 12 சிறார்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 11 பேர் பிரான்சில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இரண்டு பயணிகளிடம் போலி பாஸ்போர்ட் இருந்தது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள் தவிர, அனைத்து பயணிகளும் இந்தியா திரும்பினர்" என அவர் கூறினார்.
"இதுபோன்று ஏற்கனவே இரண்டு விமானங்கள் தரை இறங்கியுள்ளன. சில முகவர்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்காக, இந்த திட்டம் குறித்த விவரங்களை கசியவிட்டு இருக்கலாம்" என அந்த முகவர் தெரிவித்ததாக நாளிதழ் கூறியுள்ளது.
4th card
முகவர்கள் எவ்வளவு வசூலிக்கிறார்கள்?
ஆட்களைக் கடத்தும்(டாங்கி விமானங்கள்) நபர் ஒன்றுக்கு ₹40 லட்சம் முதல் ₹45 லட்சம் வரை (கிட்டத்தட்ட $48,000) வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதில், முன்பணமாக சிறிய தொகையும், அமெரிக்க எல்லையை அடைந்த பின் கணிசமான தொகையையும் முகவர்கள் வசூலிக்கின்றனர்.
முதலில், சட்டவிரோத குடியேறிகள் நேரடி விமான மூலம் எல் சால்வடோர் நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர், அந்த நாட்டின் அதிகாரிகள் இவர்களை கண்டறிந்து அபராதம் விதித்ததால், தற்போது இணைப்பு விமானம் மூலம் அனுப்பப்படுவதாகவும் அந்த முகவர் தெரிவித்தார்.
இந்த சர்ச்சையில், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த ஷாசி கிரண் ரெட்டி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போன்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு, போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.