
சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா?
செய்தி முன்னோட்டம்
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு 7,000 குழந்தைகள் வரை சிகிச்சை பெற வருவதாக, அரசுக்கு சொந்தமான சீன தேசிய வானொலி கூறுகிறது.
இந்த தொற்று பரவல், சீன மருத்துவ கட்டமைப்பை திக்குமுக்காடச் செய்திருக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், முக கவசம் அணியவும் சீன மக்களை, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது இந்தியாவை பாதிக்காது என்றும், காய்ச்சல் பரவலை எதிர்கொள்ள, இந்திய மருத்துவ கட்டமைப்பு தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனினும், சீனாவோ, இந்த காய்ச்சல் பற்றி அச்சுறுத்தல் இல்லை என கூறியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியாவை பாதிக்காது!
#BreakingNews I நிமோனியா காய்ச்சல் - தயார் நிலையில் இந்தியா #Winnews I #China I #Pneumonia I #India pic.twitter.com/RWnxexC81L
— Win News Prime (@winnewstamil) November 24, 2023