
திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இன்று காலையில், குடிமகன்களுக்கு கொண்டாட்டமான ஒரு அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை என கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் பலரும் அதை வரவேற்றனர்.
அமைச்சரின் கூற்றுப்படி, "சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி. அதிலும், ஐபிஎல் போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது" என கூறியுள்ளார்.
திருமண விழாக்களில், மதுபானத்திற்கு ஒரு போதும் அனுமதி கிடையாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மதுபானங்களுக்கு NO!
#BREAKING || திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி
— Thanthi TV (@ThanthiTV) April 24, 2023
* ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி எனவும் விளக்கம்
* திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில்… pic.twitter.com/3XrYRbKwdU