இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு
இனி, திருமண நிகழ்வுகளில், அதாவது, திருமண மண்டபகங்களிலும், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் விழாக்களிலும், உரிய அனுமதி பெற்று, மது பரிமாறலாம் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும், IPL போட்டிகளின் போது, வீரர்களின் கொண்டாட்டத்திற்காக இந்த புதிய அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. அரசிதழின் படி, ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் அந்தந்த மாவாட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர்கள், விழாக்களுக்கு சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தற்போது அரசு அனுமதித்துள்ளது. இதற்காக தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் எனவும் அறியப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு பிறகு, இனிமேல், திருமண மண்டபங்களில், Bachelor பார்ட்டிகள் தடையின்றி நடைபெறும் என இளசுகள் கொண்டாட்டத்துடன் இருக்கிறார்கள்