
தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
மதிமுக, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளதாகவும், கூடுதலாக தங்கள் கட்சியின் பம்பர சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கண்டிப்பாக தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தோழமை கட்சியினருக்கு தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் காட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சியினருடன் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
மதிமுகவின் கோரிக்கை
"எங்கள் சின்னத்தில்தான் போட்டி"
— Thanthi TV (@ThanthiTV) February 29, 2024
ஒரு மாநிலங்களவை ஒரு மக்களவை தொகுதியை கேட்டுள்ளோம் - மதிமுக
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என கூறி உள்ளோம் - மதிமுக #MDMK #ElectionUpdate #Elections2024 #DMK #ThanthiTV pic.twitter.com/Lc0yhodD7N